சென்னை: தூய்மை பணிகளை  தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை எதிர்த்து ஆகஸ்டு 1ந்தேதி முதல் நடைபெற்று வரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 9வது நாளாக தொடர்கிறது.
தூய்மை பணியாளர்களுக்கு தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் மாதம் 22,950 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால்,  தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள பகுதியில், பணியாற்றி வரும்,  தூய்மை பணியாளர்களுக்கு  16,950 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. 
முன்னதாக நேற்று இரவு அமைச்சர் சேகர்பாபு – மேயர் பிரியா உள்பட அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், தூய்மை பணியாளர்களின் கோரிக்கை ஏற்படாத நிலையில், போராட்டம் தொடர்ந்து வருகிறது.  பேச்சுவார்த்தையின்போது அமைச்சர் சேகர்பாபு, போராடும் தொழிலாளர்களை கடுமையாக சாடியதுடன், கூட்டமா உட்கார்ந்தட்டு, முதலமைச்சரையே திட்டுறீங்க, அவர் குடும்பத்துக்கு சாபம் விடுறிங்க,,,நாங்க நினைச்சா முதல்நாளே கூட்டத்தை கலைத்திருப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு, முதல்வர் ஸ்டாலின், மேயர் பிரியா குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கள்ளச் சாராயம் குடிச்சு செத்தாலே 10 லட்ச ரூபாய் கொடுக்கிற அரசாங்கத்திற்கு தூய்மை பணியாளர்களின் பல நாள் போராட்டம் கண்ணுக்கே தெரியவில்லை.. சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவை கேட்டால் பேச்சுவார்த்தை நடத்தி விட்டோம் என்கிறார். போராட்டக்காரர் களோ,  யாருமே எங்களிடம் வந்து பேசவில்லை என்கிறார்கள். இருப்பதிலேயே மிகப்பெரிய கொடுமை, கம்யூனிஸ்டு கட்சிக்காரர்கள்,   எதிர்க்கட்சிக்காரர்கள் கூட இவர்கள் சந்தித்து நியாயத்தை கேட்கவில்லை என்பதுதான். அந்த அளவுக்கு தமிழ்நாடு போய்க்கொண்டிருக்கிறது.
அப்பாவி ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்குவதில் ஆர்வம் காட்டும் திமுக அரசு,  கள்ளச்சாராயம் குடித்து குடிகாரன் இறந்தால் 10 லட்சம் வாரி வழங்கி வருகிறது. ஆனால், சென்னை மாநகரையே சுத்த வைத்து வரும்  தூய்மை பணியாளர்களை கண்டுகொள்ள மறுக்கிறது என குற்றம் சாட்டி வருகின்றனர்.
சென்னையை சுத்தமாக  வைத்துள்ளதில் பெரும் பங்காற்றி வரும் தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் திமுக அரசு மெத்தனம் காட்டுவதால், முதல்வரின் தொகுதிக்குட்பட்ட திருவி.நகர் மண்டலம், ராயபுரம் மண்டலம், பெரம்பூர் மண்டலம் என பல பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் சாலையோரம் குவியல் குவியலாய் குப்பைகள் காணப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதால், அருகே உள்ள குடியிருப்போர் அரசுமீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
போராட்டக்காரர்களை மாநகராட்சி அலுவலகத்திற்குள் அனுமதிக்க மறுத்துள்ளதால், அவர்கள் மாநகராட்சிக்கு வெளியே உள்ள பிளாட்பாரத்தில் கூடாரம் அமைத்து போராடி வருகின்றனர்.  சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்  இந்த  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பலர் இரவு பகல் பாராது போராட்டத்தில் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றன. இந்த போராட்டம்  9 நாட்களை கடந்து இன்று 9வது நாளாக  நீடிப்பதால், நகரின் பல பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னையில்,  மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அங்கு பணியாற்றி வந்த பல ஆயிரம் தூய்மை பணியாளர்கள் பணி வாய்ப்பு இழந்துள்ளதுடன், அவர்கள் தனியாரிடம்  குறைந்த சம்பளத்தில், எந்தவித எதிர்கால பணப்பலன் இன்றி பணி செய்யும் வாய்ப்பை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்

தூய்மை பணியாளர்களுக்கு தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் மாதம் 22,950 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால்,  தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள பகுதியில், பணியாற்றி வரும்,  தூய்மை பணியாளர்களுக்கு  16,950 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.  மேலும் எந்தவொரு பனப்பலனும் இல்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால், மீதமுள்ள 4 மண்டலங்களிலாவது, தூய்மை பணியாளர்களின் வாழ்வதாராம் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  போராட்டக்கார்களை  சென்னை மாநகராட்சியின் நுழைவாயில்  உள்ளே போராட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், மாநகராட்சியின் வெளிக்கேட்டுக்கு அருகில் கூடாரம் அமைத்து தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.

திருவிக நகர், ராயபுரம் உள்பட  நான்கு மண்டலங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும்  மாநகராட்சி நடவடிக்கைக்கு, மாநகராட்சியில் பணியாற்றி வரும் நிரந்தர மற்றும்  ஒப்பந்த தொழிலாளர்களாக சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக ஏற்கனவே பணியிழந்தவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் சில தொழிற்சங்கத்தினரும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த பணியாளர்களை நேற்று இரவு (ஆகஸ்டு 8) அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் உடன் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, போராடும் தொழிலாளர்களை கடுமையாக சாடியதுடன், கூட்டமா உட்கார்ந்தட்டு, முதலமைச்சரையே திட்டுறீங்க, அவர் குடும்பத்துக்கு சாபம் விடுறிங்க,,,நாங்க நினைச்சா முதல்நாளே கூட்டத்தை கலைத்திருப்போம் என்று மிரட்டல் விட்டதுடன்,  அதிமுக கவர்ன்மென்டா இருந்தா வேற மாதிரி நடத்தியிருப்பாங்க… நாங்கதான் ஜனநாயகப்பூர்வமாக  நடந்துகிறோம் என்றவர், ஒரு கட்டத்தில்,  மக்களை அமைதிப்படுத்தும் வகையில் நானும் உங்களைச் சேர்ந்தவன்தான், உங்களுடைய கஷ்டம் எனக்கு தெரியும் என சென்டிமென்டாக பேசியும் பலன் இல்லை. ஆனால், போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைக்கு அமைச்சர் முறையான பதிலை தெரிவிக்கவில்லை என கூறி  போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.