சென்னை: கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில், தமிழக மின்தேவை – தட்டுப்பாடு குறித்து அதிகாரிகளுடன் நாளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கி உள்ளதால் மின்தேவை அதிகரித்து உள்ளது. தற்போது 15,500 மெவாபட் மின்சாரம் தினசரி பயன்படுத்தப் படுவதாக தெரிவிக்கப்பட்ட உள்ளது. இந்த நிலையில், மின்தேவை மற்றும்  மின் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்ட உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காலத்தில் மின் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம்,  தொழில் நிறுவனங்களுக்கான மின்சார வசதி குறித்தும், இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற் மின்துறை உயர் அதிகாரிகள் மற்றும், அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.