சென்னை:
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் போன் மூலம் நலம் விசாரித்தார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதியாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று அமைச்சருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சருடன் தொலைபேசியில் பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், Covid19 சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் அமைச்சர் செல்லூர் ராஜுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும்! எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! என தெரிவித்துள்ளார்.