சென்னை
தமிழக அமைச்சர் சேகர் பாபு தமிழ்கம் மீது பாஜக குற்றம் சாட்டுவதாக கூறி உள்ளார்.

நேற்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கொங்குப் பகுதிகளில் நடந்த மூதாட்டியின் கொலையை சுட்டிக்காட்டி தமிழக அரசை விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தார் இந்நிலையில் சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கொரட்டூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று(ஜூன்.10) நடைபெற்றது.
இந்தக் .கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம்,
“தமிழக அரசின் மீது பாஜக கடும் குற்றச்சாட்டுகளை வைக்கிறது. ஆனால் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும். மணிப்பூரில் இன்னும் கலவரம் ஓயவில்லை. உத்திர பிரதேசத்தில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை.
தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் களத்தில் இருக்கிறார். எந்தவித குற்றச்சாட்டுகள் புகார்கள் என்றாலும் அவர் நேரடியாக முன் நின்று அவற்றைத் தீர்த்து வைக்கிறார். ஆகவே தமிழகத்தின் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்னர் பாஜக தங்கள் முதுகை பார்த்துக்கொள்ள வேண்டும்”.
என்று கூறியுள்ளார்.