விருதுநகர்: ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர், அமைச்சர்ல ராஜேந்திர பாலாஜி தோல்வி அடைந்தார். அவரை வீழ்த்தி திமுக வேட்பாளர் தங்க பாண்டியன் வெற்றி பெற்றார்.
அதிமுகவில் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான கே.டி ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். தற்போது தங்கபாண்டியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.