
சென்னை
தனது அரசியல் படம் ஓடுமா என்று கமல் ஒத்திகை பார்ப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கிண்டலடித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “நடிகர்கள் தீபாவளி பட வெளியீடு போல கட்சி ஆரம்பிக்கிறார்கள், எல்லாம் இரண்டே மாதங்கள்தான். பிறகு அவை அப்புறம் பெட்டிக்குள் முடங்கி விடும்.
இப்படி எல்லோரும் கட்சி தொடங்குவதாக கூறினால், அதற்கு ஒரு மரியாதை இல்லாமல் போய் விடும்” என்றார்.
மேலும், “தற்போது புதிதாக எடுத்து வரும் அரசியல் படம் ஓடுமா, ஓடாதா என்று கமல் ஒத்திகை பார்த்து வருகிறார். நிச்சயமாக அந்த படம் ஓடாது” என்று கிண்டலாக தெரிவித்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
Patrikai.com official YouTube Channel