புதுடெல்லி:
க்கு, தாமிரம் மூலப்பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இன்று மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எக்கு, தாமிரம், அலுமினியம் பித்தளை & பருத்தி நூல் ஆகியவற்றின் மூலப்பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், மதுரையில் அமைய உள்ள NIPER திட்டத்திற்கு மாநில அரசு ஏற்கனவே நில ஒதுக்கீடு செய்து விட்டபோதும் இதுவரை எந்த நிதியும் மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கப்படவில்லை எனவே நடப்பு பட்ஜெடில் இதற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜவுளித் துறையின் ஜிஎஸ்டி 5% இருந்து 12 % உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக நிதியமைச்சர், இந்த வரி உயர்வு சிறு குறு தொழில் துறையில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவே இதனை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், பழைய வாகனங்களை அழிக்கும் 2021 புதிய சட்டத்தின்படி இதற்காக கட்டமைப்புகளை உருவாக்க மாநில அரசுகளுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்பட்டிருக்கிறது எனவே வரும் மத்திய பட்ஜெட்டின் பொழுது இதற்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்த வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.