சென்னை:

ட்டசபையின் இரண்டாம் நாளான இன்று பள்ளி கல்விதுறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.  அப்போது பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் 37 அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த வருடம் புதிதாக 30 தொடக்க பள்ளிகள் துவங்கப்படும்

தமிழ்நாட்டில் பயின்று பிற மாநிலங்களுக்கு கல்வி பயிலச் செல்பவர்களுக்கு ஆன்லைனில் டி.சி வழங்கப்படும்

தமிழகத்தில்உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் யோகா நடைமுறைப்படுத்தப்படும்

சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருது

அரிய வகை நூல்கள் ஆவணங்கள் பொது மக்களிடமிருந்து பெறப்படும்

மதுரையில் ஒரு லட்சம் நூல்களுடன் பெரிய நூலகம்

30 கோடி செலவில் பொது நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள்

கீழடியில் சிந்து சமவெளி உட்பட பழங்கால நாகரீகம் குறித்து சிறப்பு நூலகம்

அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு தொழில்நுட்ப புத்தகங்கள் வாங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு

3 கோடி செலவில் 32 மாவட்டங்களில் புத்தக கண்காட்சி

நடப்பு நிதியாண்டில் புதிதாக 4084 ஆசிரியர்கள் நியமனம்

மாதம் ரூ.7,500 சம்பளத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம்

17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணி நிரந்தரம்

கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்க நவம்பர் வரை அவகாசம்

மெட்ரிக் பள்ளிகள் துவங்க இணையதளம் மூலம் அனுமதி

அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு தொழில்நுட்ப நூல்கள் வாங்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் அறிவியல் தொழில்நுட்பம், கலைகளை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் 100 மாணவர்கள் வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

 தமிழ்நாட்டில் பயின்று பிற மாநிலங்களுக்கு கல்வி பயிலச் செல்பவர்களுக்கு ஆன்லைனில் டி.சி வழங்கப்படும்.

சுயநிதி பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்படும்.

கலை அறிவியல் கல்லூரிகளில் 89 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2.10 கோடி ரூபாய் மதிப்பில் திறன் வங்கி மையம் தொடங்கப்படும்.

சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அறிவியல் கோளம் 2.50 கோடி ரூபாய்யில் அமைக்கப்படும்.

மாணவியர் பயிலும் 5639 அரசு உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் நாப்கின் மற்றும் அதனை எரியூட்டும் இயந்திரம் வழங்கப்படும்

பாடத்திட்டங்கள் மாற்றம் குறித்து வல்லுநர் குழு கருத்து கேட்டு ஒரு வாரத்தில் சட்டசபையில் அறிவிப்பு

486 அரசு பள்ளியில் கணிணி வழி கற்றல் மையங்கள்

அரசு பள்ளி மாணவர்களின் பொது அறிவு வளர்க்க 31,322 பள்ளிகளில் நாளிதழ், சிறுவர் இதழ்

உள்பட 37 அறிவிப்புகளை அமைச்சர்கள் வெளியிட்டார்.