டெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  கடந்த 5ம் தேதி 40 லட்சமாக இருந்த பாதிப்பு எண்ணிக்கையானது, அடுத்த 11 நாட்களில் 50 லட்சத்தை கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியானது கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந் நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

இதனை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது: நேற்றைய தினம் நான் பலவீனமாக உணர்ந்தேன். மருத்துவரை அணுகிய போது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

நான் தற்போது அனைவரின் ஆசீர்வாதங்களுடனும், நல்வாழ்த்துக்களுடனும் நலமாக உள்ளேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.