டில்லி:
நேற்று இரவு விடுதலை செய்யப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் உடல் பரிசோதனைக்காக , டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் நேற்று மாலை வாகா அடாரி எல்லைப் பகுதியில் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டார். இவருக்கு வாகா எல்லையில் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா திரும்பிய அபிநந்தன், டெல்லியில் உள்ள மருத்துவமனையில் உடல்நல பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மருத்துவமனைக்கே சென்று அபிநந்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
Patrikai.com official YouTube Channel