சென்னை: அமலாக்கத்துறை விசாரணையின்போது  அமைச்சர் நேருவின் தம்பி கே.என்.ரவிச்சந்திரனுக்கு திடீர் நெஞ்சுலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்புபோல அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு உள்பட பல இடங்களில் சோதனை நடத்தி அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்த நிலையில், திடீரென நெஞ்சுவலி என செந்தில் பாலாஜி உருண்டு புரண்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அமைச்சர் கேஎன்.நேருவின் தம்பி, என்.ரவிச்சந்திரனும் அமலாக்கத்துறையினரின் விசாரணையின்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி கீழே விழுந்தார். இருது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்றம்  புகாரின்பேரில், அமைச்சர் கே.என்.நேரு, அவரது தம்பிகள் மற்றும் டிவிஎச் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான சென்னை, கோவை உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறையினர் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தினர். இதில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களைக்கொண்டு, அமைச்சர் நேருவின் தம்பியான கே.என்.ரவிச்சந்திரனை அழைத்துச்சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பின்னர், கே.என்.ரவிச்சந்திரனை அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்றும்  ஆவணங்களை காட்டி விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவரை மீண்டும் அலுவலகத்துக்கு விசாரணைக்காக  அழைத்து வந்தனர். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை தொடங்கியது