சென்னை

மிழக ஆளுநர் ஆர் என் ரவியை  மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக அளுநர் ஆர் என் ரவி அண்மையில் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, அங்கிருந்த மாணவர்களை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று 3 முறை சொல்ல வைத்தார். ஆளுநரின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து மனோ தங்கராஜ் எக்ஸ்’ தளத்தில்,

“இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை கால் தூசு அளவிற்கு கூட கவர்னர் மதிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் Bunch of Thoughts எனும் நஞ்சை மனதில் சுமந்து நடக்கும் ஆளுநர் எப்படி அரசியல் சட்டத்தை மதிப்பார்?

பல மத நம்பிக்கைகள் உடைய கல்லூரி மாணவர்கள் மத்தியில், அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட மதத்தை திணிக்கும் நோக்கில் தனது அதிகாரத்தை தவறாகக் கையாண்டிருக்கிறார்.

இப்பேர்பட்ட நஞ்சை சுமக்கும் நாகரீகமற்றவர்கள் எப்படி நடுநிலையுடன் மக்களுக்கு சேவை ஆற்ற முடியும்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பால் விரக்தியில் இருக்கம் ஆளுநரே திரும்ப போ.”

எனப் பதிவிட்டுள்ளார்.