சென்னை: சிகரெட், புகையிலை விளம்பரங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் சட்டப்பேரவை கூட்ட தொடரில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுக சாமியின் ஆணையம் அளித்த அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார். இதேபோல தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் குறித்து குழு அளித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று விதி எண் 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து,  ஆன்லைட் சூதாட்ட தடை மசோதாவுடன் பல்வேறு சட்ட மசோதாக்களும் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிகரெட், புகையிலை விளம்பரங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த மசோதாக்கள் பேரவையின் கடைசி நேரத்தில் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்படும்.