சென்னை: சென்னையில் “நடமாடும் பல் மருத்துவமனை” சேவையை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தமிழகஅரசு சார்பில், மக்களைத் தேடி மருத்துவத்திட்டத்தின் கீழ் பயனர்களின் வீடு தேடி மருத்துவ சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்று ‘நடமாடும் பல் மருத்துவமனை சேவை சென்னையில் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த சேவையை அரசு பல் மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். .அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், நடமாடும் பல் மருத்துவமனை சேவை, வாரத்தின் ”செவ்வாய், வியாழக்கிழமைகளில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் வாகனங்கள் மூலம்வழங்கப்படும்.
அரசுப் பள்ளிகளுக்கும் வாகனங்கள் அனுப்பப்பட்டு மாணவர்களுக்கு பல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அமைச்சர்கள் இருவரும் அரசு பல் மருத்துவ கல்லூரியை ஆய்வுசெய்தனர்.