
சென்னை,
தமிழக மீன்வளத்துறை மற்றும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
வடசென்னை காசிமேடு பகுதியில் மீனவர்கள் பெரும்பாலோனோர் வசித்து வருகின்றனர். அங்குள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் மூலம் ஏராளமான மீனவர்கள் எந்திர படகுகள் மற்றும் நாட்டு படகுகள் மூலம் மீன்பிடித்து வருவதும், அதை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதும் நடைபெற்று வருகின்றன.
அங்கு பொதுமக்கள் மீன் வாங்கும் வகையில் மீன் விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த மீன்பிடி விற்பனைக்கூடத்தை வேறு இடத்துக்கு மாற்ற இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து, காசிமேடு மீன் விற்பனைக்கூடத்தை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என்று வலியுறுத்தி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வீட்டை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் வீட்டை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
[youtube-feed feed=1]