சென்னை:

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கும் பணி முற்பகல் 11 மணி அளவில் தொடங்கியது.

கடந்த 31ந்தேதி அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்து 2 நாட்களாக தொடர்ந்து எரிந்தது. 2 நாட்களாக தீயை அணைக்கும் பணிகளும்  நடைபெற்று வந்தன.  இதன் காரணமாக கட்டிடத்தின் மேற்பகுதி உடைந்து விழுந்தது. மேலும் கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு, இடிந்து விழும்  நிலை ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள் குழு கட்டிடத்தை ஆய்வு செய்து இடிக்க உத்தரவிட்டது.

நேற்றே இடிக்கும் பணி தொடங்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று முற்பகல்தான் இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான ராட்சத இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 3 நாட்களில் கட்டிடத்தை இடிக்கும் பணி முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பணியை  உயர்ந்த கட்டிங்களை இடிக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் ப்ரவீன் டிரேடர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளதா அந்த நிறுவனத்தின் முதன்மை மேலாளர் பீர்முகமது தெரிவித்துள்ளார்.