சென்னை
தமிழக அமைச்சர் முத்துசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண நிதி அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன இங்கு நிவாரணப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 நிவாரணத் தொகை வ்ழங்கபடும் என தமிழக அரசு அறிவித்தது.
நேற்று சென்னை மாங்காடு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் முத்துசாமி நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அமைச்சர் செய்தியாளர்களிடம்,
”தற்போது பெய்துள்ள மழையின் அனுபவத்தை வைத்து முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க உள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களையும் ஒரே மாதிரியாகவே பார்க்கிறோம்,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணத்தொகை கிடைக்க வாய்ப்பு உண்டு”
என்று தெரிவித்தார்.