ரோடு

ந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தைத் தனியார் பள்ளிகள் இப்போதே வசூலிக்கக் கூடாது என அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு யாரும் பணிக்குச் செல்ல முடியாத நிலை உண்டாகி இருக்கிறது.   இதனால் தனியார் மற்றும்  வங்கிக் கடன் தவணைகள் கட்ட 3 மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி மக்கள் கல்விக் கட்டண வசூலையும் தற்போது தள்ளி வைக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோட்டில் நடந்த ஒரு அரசு நிகழ்வில் கலந்துக் கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம், ”  உள்ளாட்சி அமைச்சரிடம் நகராட்சியின் குடிநீர் வரி, வீட்டு வரி உள்ளிட்ட வரி வசூலை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.   தடை உத்தரவு உள்ளவரை நீட் பயிற்சி நடத்த முடியாத நிலை உள்ளது.   அதன்பிறகு 9 கல்லூரிகளில் 3500 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை இப்போதே வசூலிக்கக் கூடாது எனத் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.