சென்னை

மிழக அமைச்சர் எ வ வேலு விரைவில் தாம்பர்ம் பகுதியில் உள்ள கிஷ்கிந்த சாலை அகலப்ப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

இன்று தாம்பரம் தொகுதி கிஷ்கிந்தா சாலையை அகலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ,

”தாம்பரம் தொகுதி கிஷ்கிந்தா சாலையில் 1.4 கி.லோ மீட்டர் வலது பக்கம் வனத்துறை பகுதியாகவும் இடப்பக்கம் குடியிருப்பு பகுதியாகவும் இருக்கிறது.

4 வழிச்சாலையாக மாற்ற வனத்துறை அனுமதி பெறவும், விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யவும், அதன் அடிப்படையில் பணிகளை பரிசீலனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

7.2 கிலோமீட்டர் சாலை போக்குவரத்து அடர்த்தியின் அடிப்படையில் நான்கு வழிசாலையாக அகலப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.”

என்று பதிலளித்தார்.