சென்னை: தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் தனியாா் அமைப்புகள் சாா்பில் பள்ளி மாணவா்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள அரசுப் பள்ளி ஆசிரியா்களை மட்டுமே தொழிற்பயிற்சி மைய ஆசிரியா் களாகப் பணி மாற்றம் செய்யப்படுகிறது. கூடுதல் ஆசிரியா்கள் இல்லாத பள்ளிகளில் இருந்து மாற்றம் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியா்களுக்கு ஊதியம் கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லாமல் வழக்கம்போல் ஊதியம் கிடைக்கும் என கூறினார்.
மேலும், தனியாா் பள்ளியில் சேரும் மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தனியாா் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிவுறுத்தலை மீறி, கட்டணம் வசூலித்தாலோ அல்லது கூடுதல்கள் கட்டணம் வசூலித்தாலோ அரசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், அவ்வாறு விதிமீறலில் ஈடுபடும் பள்ளிகள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.