சென்னை: அரசு பள்ளி மாணாக்கர்களை துபாய்க்கு கல்வி சுற்றுலா அழைத்துச்சென்றுள்ள பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அங்கு அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து வருகிறார். கடல் மட்டத்திற்குக் கீழே அமைந்துள்ள புகழ்பெற்ற லூவர் மியூசியம் மற்றும்  துபாய் பியூச்சர் ஆப் மியூசியம் உள்பட பல்வேறு இடங்களை சுற்றி காண்பித்து பரவப்படுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில், திமுக அரசு பதவி ஏற்றதும், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தி, அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. அதன்படி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டிகளில் வென்ற 68 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு துபாய்க்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த மாணாக்கர்களுடன் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் உள்பட ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் உடன் சென்றுள்ளனர். இவர்கள்  கடந்த வியாழக்கிழமை விமானம் மூலம் அவர்கள் துபாய் சென்றடைந்தனர். அங்க  துபாய், அபுதாபி நகரங்களில் முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்த்து மெய்சிலிர்த்துபோய் உள்ளனர்.

 துபாயின் ஜெபல் அலி இந்து கோயில், லூவர் மியூசியம், கஸ்ர் அல் வதன் அரண்மனை ஆகிய இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நேற்று ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது அமைச்சர்அன்பில் மகேஷ்,  அமீரக அரசுக்குச் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கான அழைப்பிதழை அமைச்சர் வழங்கினார்.

துபாய் ப்யூச்சர் ஆப் மியூசியத்தை நேற்று அமைச்சருடன் சேர்ந்து பள்ளி மாணாக்கர்களும் சுற்றிப் பார்த்தனம். மியூசியத்தில் அமைச்சருக்குச் சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அமைச்சருக்குச் சிறப்பு வசதி ஏற்படுத்தித் தருவதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அதை மறுத்துவிட்டு அனைவரையும் போல வரிசையில் அமைச்சர் அன்பில் மகேஷ் மியூசியத்தை பார்வையிட்டார்.  அமைச்சரும் தங்களுடன் வருகிறார் என்பதைப் பார்த்த உடன் மாணவ மாணவிகள் உற்சாகமடைந்தனர். துபாயில் உள்ள மிக முக்கியமான அருங்கியாகங்களில் ஒன்று இந்த ப்யூச்சர் ஆப் மியூசியமும் ஒன்றாகும். இந்தாண்டு தொடக்கத்தில் தான் இந்த மியூசியம் திறக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. வரும் காலத்தில் உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியால் எப்படி இருக்கும் என்பதும் விளக்கப்பட்டது.

முன்னதாக,  அரசுப் பள்ளி மாணவர்களுடன் கல்விச் சுற்றுலா சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுடன் கஸ்ர் அல் வதன் அரண்மனையைச் சுற்றிப் பார்த்தனர் தொடர்பாக  அபுதாபியில் உள்ள மிகவும் புகழ்பெற்ற லூவர் மியூசியத்திற்கு சென்றுள்ளனர். சர்வதேச அளவில் உள்ள மிகச் சிறந்த அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்றாகும்.  இந்த லூவர் மியூசியம் கடல் மட்டத்திற்குக் கீழே அமைந்துள்ள அருங்காட்சியகம். இங்க  பிரான்ஸ் உள்ளிட்ட பல நாட்டு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் பொருட்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதை மாணாக்கர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.   அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒவ்வொரு கலைப் பொருட்களையும் மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கினர். இதனை மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

இதைத்தொடர்ந்து, துபாய் சுற்றுலாவை முடித்துக்கொண்டு மாணாக்கர்கள் இன்று இரவு விமானம் மூலம்  சென்னை திரும்புகின்றனர்.