கோவை; அமைச்சர் ஃபெயில்!சொதப்பலில் பள்ளிக்கல்வித்துறை என பிரபல வார இதழான ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டிருந்தது. இதை கண்டித்து, அன்பில் மகேஷ் நண்பரான, முதல்வரின் மகன் நடிகரும் எம்எல்ஏவுமான  உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தினர், கோவை தெற்கு தாசில்தான் அலுவலகம் முன்பு ஜூனியர் விகடன் இதழை எரித்து போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொங்கு மண்டலத்தில் அரசுப்முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில்,  அமைச்சர் அன்பில் மகேஷ் குறித்து  செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், அமைச்சரின் திறமையின்மையால், பள்ளிக்கல்வித்துறை சீரழிந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.  அந்த கட்டுரையில், சில தலைப்புகள் அமைச்சர் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களை இழிவுபடுத்தும் விதத்தில் இருந்தாகவும், மன அழுத்தத்தில் ஆசிரியர்கள் இருப்பதாகவும்,  அந்தரத்தில் பயிற்சி மையம், அமைச்சர் பெயில் என உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அமைச்சர் குறித்து   செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது.

உண்மையில் அமைச்சர் சொல்வதற்கு முரணாகவே பள்ளிக்கல்வித்துறை செயல்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு நடவடிக்கைகள், இன்றைய இளைய சமுதாயத்தை மீண்டும் கற்காலத்துக்கு கொண்டு செல்லும் வகையிலேயே இருக்கிறது. கல்வி முறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவதாக கூறி பெற்றோர்களிடமும்,, மாணாக்கர்களிடமும் வெறுப்பை சம்பாதித்து வருகிறது. இதுமட்டுமின்றி, நவீன டிஜிட்டல் இருந்துகொண்டு, கற்காலத்தைப் போல இன்னும் படம் வரையுங்கள், அது செய்யுங்கள் என ஆசிரியர்களும், மாணவர்களுக்கும் தேவையற்ற செயல்களை அறிமுகப்படுத்தி வருகிறது.  இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், பள்ளி மேலாண்மை குழு பணி, எமிஸ் இணையதள பதிவுகள் என, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணிச்சுமை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள்  மாணவர்களுக்கு பாடமெடுப்பதை மறந்து, மொபைல் போனும் இணையதளமுமாக பணியாற்ற வேண்டியுள்ளது’ என புலம்பி வருகின்றனர் ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு பாடம் எடுப்பதை விடுத்து, கல்வித்துறையின் பணிகளை மேற்கொள்ளவே நேரம் சரியாக இருக்சகிறது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.

தனியார் பிரிகேஜியிலேயே குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர், இணையதளம் மூலம் பாடங்களை நடத்தி வரும் நிலையில், அரசு பள்ளி இன்னும், அ, ஆ, என படம் வரைந்து கற்காலத்திலேயே இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதைத்தான்  ஜூனியர் விடகன் விரிவாக வெளியிட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் அமைச்சர் அறிவிக்கும் பல அறிவிப்புகள் செயலுக்கு வரவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் கோபமடைந்த அமைச்சரும், அவரது நண்பருமான உதயநிதி, தனது ஆதரவாளர்களை கொண்டு ஜூனியர்விகடன்  இதழ்களை, கோவை பகுதியில்  உதயநிதி ஸ்டாலின் மன்றத்தினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்ட தலைவர் இருகூர் பூபதி தலைமையில், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தினர் இந் த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அந்த இதழுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும்,  இந்த நாளேடுகளை கடைகளில் விற்பனை செய்தால் மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக கூறியதுட்ன், பல இடங்களில் ஜூனியர் விகடன் இதழ்களை விற்பனை செய்யக்கூடாது என்று மிரட்டப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, காவல்துறையின் வேடிக்கை பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் மன்றத்தினரின் இந்த நடவடிக்கையால் கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.