சென்னை: தமிழகத்தில் 10, 11, 12வது வகுஙபஹப பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏற்கனாவே 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. அதுபோல, 11ம், 12ம் வகுப்பு செய்முறை தேர்வு (Practical exam) தேதியும் அறிவிக்கப்பட்டது. ஆனால், பொதுத்தேர்வுக்கும் பிராக்டிக்கல் தேர்வுக்கும் இடையே கால அவகாசம் குறைவாக இருந்ததால் அதை மாற்ற கோரிக்கை எழுந்தது.
ஏற்கனவே 2022-23 பொதுத் தேர்வு கால அட்டவணை கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது. அதன்படி, 12-ம் வகுப்புக்கு மார்ச் 13 முதல் ஏப்.3-ம்தேதி வரையும், 11-ம் வகுப்புக்கு மார்ச் 14-ல் தொடங்கி ஏப்.5-ம் தேதி வரையும், 10-ம் வகுப்புக்கு ஏப்.6 முதல் 20-ம் தேதி வரையும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கல்வித்துறை அலுவலர்கள் அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று ஆலோசனை நடத்தினார். மேலும் தேர்வுகள், தேர்வு முடிவுகள் வெளியிடுவது, தேர்வின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய நடவடிக்கைள், மாணாக்கர்கள் தேர்வை எழுத தேவையான வசதிகள் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பிராக்டிக்கல் எக்சாம் (செய்முறை தேர்வு) தேதிகள் மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சந்தித்த அமைச்சர், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வை மார்ச் 1 முதல் 9-ஆம் தேதிக்குள் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். ஏற்கனவே மார்ச் 6 முதல் 10 வரை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், 10, 11, 12-ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனி தேர்வர்கள் பிப்.1 வரை விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றவர்,
மேலும், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளையும் அறிவித்தார். அதன்படி,
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகிறது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்மே 17ம் தேதி வெளியாகிறது
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகிறது என்று கூறினார்.
10, 11, 12-ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனி தேர்வர்கள் பிப்.1 வரை விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.