சென்னை: தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதன்படி மே 5ம் தேதி  12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது. ஜூன் 23ஆம் தேதி  தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

2021–2022-ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதையடுத்து தற்போது திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பொதுத் தேர்வுக்கான தேதிகள் விரைவில் வெளியாகும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு அட்டவணையை வெளியிட்டார்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 5ம் தேதி  தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வாக்கில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 6ம் தேதி  தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள்  ஜூன் 17ஆம் தேதி வாக்கில் வெளியிடப்படும்.

11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 9ம் தேதி  தொடங்கி மே 31 ஆம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள்  ஜூலை 7ந்தேதி வெளியிடப்படுகிறது.

10, 11, 12ஆம் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி மே2ந்தேதி வரை நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.