சென்னை

கொரோனா பரவலைத் தடுக்க வெளியே செல்லும் போது முகக் கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா சுப்ரமணியன் வலியுறுத்தி உள்ளார்.

நேற்று சென்னை எழும்பூர் நலவாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் நேற்று, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் ‘உலக எய்ட்ஸ் தினம் 2023’ நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.

அப்போது அவர்,

”தமிழகத்தில் ஓரிலக்க அளவில் கொரோனா பாதிப்புகள் இருக்கிறது. புதிதாக ஜே.என்.1 என்கின்ற வைரஸ் இந்தியாவில் பரவலாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் ஜே.என்.1 என்ற வைரஸ் 4 பேருக்கு கண்டறியப்பட்டது. இவர்கள் 4 பேரும் திருச்சி, மதுரை, கோவை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

ஜே என் 1 வைரஸ் குறித்து பெரிய அளவில் அச்சப்பட வேண்டியதில்லை. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட அறிவிப்பில் கர்ப்பிணி தாய்மார்கள், வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆகவே, அதனை கடைப்பிடித்தால் வைரஸ் பாதிப்புகள் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இல்லை.”

என்று அறிவுறுத்தி உள்ளார்.