சென்னை:

தேசிய நெடுஞ்சாலை மற்றும் சுங்கச்சாவடிகளில், மத்திய அரசு சார்பில் பயணிகளின் வசதிக்காக மினி ஹைவே நெஸ்ட் என்ற பெயரில் சிறிய கடைகள் அமைக்கப்படும் என அறிவித்து அதற்கான பணிகள் நடைபெற்ற வந்தன.

இந்நிலையில், தமிழகத்தில் முதல் ஹைவே நெஸ்ட் டீக்கடை திறக்கப்பட்டுள்ளது.  சென்னை, பைபாஸ் சாலையில், சூரப்பட்டு சுங்கச் சாவடியில் இந்த கடை  நேற்று திறக்கப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில், ‘மினி ஹைவே நெஸ்ட்’ என்ற பெயரில், டீக்கடைகள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதிக் கட்கரி அறிவித்திருந்தார்.

இதன்படி  தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள  46  சுங்கச் சாவடிகள் அருகே இந்த கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதில் முதல் கடை சென்னை பைபாஸ் சாலையில், சூரப்பட்டு சுங்கச் சாவடி அருகே முதல் கடை திறக்கப்பட்டுள்ளது.

இந்த கடையில், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட டீ, காபி, பழரசங்கள், குளிர்பானங்கள், பிஸ்கெட் போன்ற ஸ்நாக்ஸ் போன்றவை விற்பனை செய்யப்படும்.

இந்த கடைக்கு  ‘மினி ஹைவே நெஸ்ட்’ என, பெயரிடப்பட்டுள்ளது. இந்த டீக்கடை  தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிர்வகித்து வரும் என கூறப்பட்டுள்ளது.