சென்னை:
இந்திய மின்சார சட்டத்திருத்த மசோதா நடைமுறைக்கு வந்தால் தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறும் சுமார் ஒரு கோடி குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தாக்கல் செய்தார். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மின்சார சட்டத்திற்கு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இலவச மின்சார சலுகைகள் ரத்து செய்யப்படுவதுடன், மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குதல், குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் மின்கட்டணத்தை நிர்ணயிப்பது உள்பட, மாநில அரசின் பல்வேறு அதிகாரங்கள் தேசிய மின் தொகுப்பு விநியோக மையத்துக்கே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் இந்த புதிய மசோதாவுக்கு தமிழ்நாடு உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இந்திய மின்சார சட்டத்திருத்த மசோதா நடைமுறைக்கு வந்தால் தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறும் சுமார் ஒரு கோடி குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.