சென்னை

ந்திய வானிலை ஆய்வு மையம் மிக்ஜம் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தொடர்ந்து வலுப்பெற்று தற்[ஓது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக அதே பகுதியில் நிலவி வருகிறது.  அடுத்த 24 மணி நேரத்துக்குள் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதற்குப் பிறகு இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ‘மிக்ஜம்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.

வருகிற டிசம்பர் 2-ந்தேதி புயல் உருவாகும் என்று வானிலை மையம் கூறியிருந்த நிலையில், தற்போது ஒருநாள் தாமதமாக 3-ந்தேதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  வங்கக்கடலில் உருவாகவுள்ள ‘மிக்ஜம்’ புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி வரும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.