சென்னை

மிழக அமைச்சர் டி ஆர் பி ராஜா சாம்சங் ஊழியர் போராட்டம் தொடர்வது குறித்து கவலை தெரிவித்துள்ளார்

சாம்சங் ஊழியர்களின் போரட்டதைஇ நிறுத்த தமிழக அமைச்சர்கள் பெரிதும் முயன்று பலமுறை பேச்சு வார்த்தை ந்டத்தி உள்ளனர்.  நேற்று நடந்த பேச்சு வார்த்தையில் சாம்சங் நிறுவனம் ஊழியர்களின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துல்ளதாக தெரிவிக்கப்பட்டது ஆனாலும் சாம்சங் ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது

இது குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா  செய்தியாளர்களிட்ம,

“சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக 7 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.  எதற்காக போராட்டத்தை நீட்டிக்கிறார்கள் என்று தெரியவில்லை? முதல்வர் 3 அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்பு கூட ஏன் போராட்டத்தை தொடர்கிறார்கள்? என்று தெரியவில்லை.

போராட்டம் நடத்தும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கான ஊதியம் மறுக்கப்படும்.  முதல்வர் நேரடியாக மக்கள் பக்கம் இருக்கிறார். மக்களுக்கு மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று உடன் இருக்கிறார். சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னையை பொறுத்தவரை நிறுவனம் தரப்பில் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் தான் பேசுவோம் என கூறுகிறார்கள்.

ஊழியர்கள் சிஐடியு தரப்பில் பேச வேண்டும் என்று கூறுகிறார்கள். வழக்கு நிலுவையில் உள்ளது. உங்களால் எந்த பாதிப்பும் மற்ற ஊழியர்களுக்கு வந்து விடக்கூடாது என்று மனதில் கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் உங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று கவனத்தில் கொள்ளுங்கள்”

என்று தெரிவித்துள்ளார்.