சிகார், ராஜஸ்தான்

ங்களை தங்க வைத்து உணவு அளித்த கிராம வாசிகளுக்கு வெளிமாநில தொழிலாளர்கள் பள்ளிக்கு வர்ணம் அடித்து நன்றியைக் காட்டி உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சிகார் மாவட்டத்தில் உள்ள பல்சானா என்னும் பகுதியில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் பணி புரிந்து வந்தனர்.  இவர்கள் மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  கொரோனா கட்டுப்பாட்டுக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாத நிலை உண்டானது.

இதனால் அவர்கள் பல்சானா கிராம வாசிகளால் அதே ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தில் தனிமையில் தங்க வைக்கப்பட்டனர்.   அவர்களுக்குக் கிராம் மக்கள் ஒன்றிணைந்து உணவு வசதிகள் செய்த தந்தனர்.    தங்களுக்கு தங்கப் பள்ளிக்கட்டிடம் மற்றும் கிராம வாசிகள் அளித்த உணவுக்காக வெளியூர் தொழிலாளர்கள் தங்கள் நன்றியை புது விதமாக தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தங்கி இருந்த அந்த பள்ளிக் கட்டிடம் முழுவதும் இந்த வெளிமாநில தொழிலாளர்கள் வர்ணம் அடித்து புதியது போஒல ஆக்கி உள்ளனர்.   இதற்கான பொருட்களை அந்த கிராம தலைவர் வாங்கி கொடுத்துள்ளார்.   இந்த செய்தி சமூக வலைத் தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.  நெட்டிசன்கள் இந்த தொழிலாளர்களை மேல் பாராட்டு மழையால் நனைய வைத்துள்ளனர்.