அமர்ஜித் சின்ஹா

டில்லி,
ந்திய கிராமங்களில் நிலவும் வறுமையை ஒழிக்கும் விதமாக மத்திய அரசு ‘மைக்ரோ கிரெடிட்’ திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.

இதன்படி இந்திய கிராமங்களில் வறுமையில் தவிக்கும் குடும்பங்களுக்கு, எவ்விதமான கியாரண்டி இல்லாமல், மிகவும் குறைந்த வட்டியில் ஒரு குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் என்ற வீதத்தில் அடுத்த 3-5 வருடங்களுக்குக் கடன் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, கிராம வளர்ச்சித் துறை செயலாளர் அமர்ஜித் சின்ஹா கூறியதாவது,

கிராம மக்களுக்கு அவர்களின் அடிப்படை தேவைக்களுக்காக கடன் வழங்கும் முறையை மத்திய அரசு எளிமையாக்கி உள்ளது.

இதற்காக கிராம பகுதிகளில் உள்ள குடும்பங்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இப்பணி முடிவடைந்தவுடன், அவர்களின் வாழ்வாதாரம் உயர, எளிமையான முறையில் ரூ.1 லட்சம் வரை நேரடியாக கடன் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 8.5 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும்,  தற்போதைய கணக்கெடுப்பின்படி இந்திய கிராம பகுதிகளில் மட்டும் சுமார் 8.5 கோடி குடும்பங்கள் ஏழ்மையில் தவித்து வருகிறது.

இந்த அனைத்துக் குடும்பங்களையும் 2019ம் ஆண்டுக்குள் மத்திய அரசின் இந்த ‘மைக்ரோ கிரெடிட்’  திட்டத்தின் கீழ் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம்  வருடத்திற்கு 60,000 கோடி ரூபாய் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் கடன் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும் இந்த திட்டம் 2019ம் ஆண்டு வரை மட்டுமே தொடரும் என்றும், இதன் காரணமாக ஏழை எளிய மக்கள், விவசாயிகள், கூலி தொழிலாளிகள் பைனான்ஸ் போன்ற  அதிக வட்டி அளிப்பவர்களை நம்ப தேவையில்லாத நிலை உருவாகும் என்றார்.

இந்த மைக்ரோ கிரெடிட் திட்டத்தின் மூலம் கடன் அளிக்கும் திட்டம், கிராம மக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்றும் கூறினார்.

இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் விவசாயம் மேலும் ஊரக வளர்ச்சி அமைச்சகம், விவசாயம் மற்றும் விலங்கு வளர்ப்பு அமைச்சகத்திடம் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் கூறினார்.

கிராம மக்கள் இந்த திட்டத்தின்மூலம்,  மாட்டுப் பண்ணை, ஆடு தொட்டி, பால்  உற்பத்தி,  விவசாய பயன்பாடு போன்றவற்றிற்கு கடன் பெறலாம்.

நாடு முழுவதும் தற்போது வங்கிகள் 11 சதவீத வட்டிகளில் கடன் கொடுத்து வருகிறது. ஆனால், இந்த மைக்ரோ கிரெடிட் திட்டத்தின்மூலம் 3 சதவகிதம், 4 சதவிகிதம் வரை மட்டுமே வட்டி விகிதத்தில் கடன்பெற முடியும்.

இத்திட்டத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு பஞ்சாயத்து அமைப்புகள் மூலம் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.