தூத்துக்குடி,
மலேசியாவில் தமிழர்களால் உருவாக்கப்பட்ட எம்ஜிஆர் வெப் டிவியை முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிகம் முழுவதும் நடைபெற்று வந்தது. இறுதி கூட்டம் இன்று 25வது கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள கோரம்பள்ளம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப. தனபால் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவின்போது, எம்ஜிஆரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி 214 திட்டப் பணிகளை திறந்து வைத்தும், பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார்.
அதைத்தொடர்நது, மலேசிய தமிழர்களால் உருவாக்கப்பட்ட எம்ஜிஆர் வெப் டிவியை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.