சென்னை:
எம்ஜிஆர் சிலைக்கு நாளை தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு நாளை தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை கிண்டி எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள சிலைக்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.