நெட்டிசன்:
பி.ஜே. பிரான்சிஸ் (P.J. Francis) அவர்களின் முகநூல் பதிவு
எம்ஜிஆர் உடல்நலம் குன்றி அமெரிக்க புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் போது நடிகை மஞ்சுளா அவரைக் காணச்சென்றார்.
புரட்சித்தலைவருக்கு நினைவுகள் மிகவும் குன்றியிருந்த நேரம்.
அதனால் மஞ்சுளாவிடம் சைகையில் ‘நீங்க யார்? ‘ நர்ஸா ? என கேட்டார்.
இதனால் திகைத்த அவர் ‘ நான் தான் மஞ்சுளா, இந்தியாவிலிருந்து’ வந்திருக்கேன் என்றார்.
தலைவர் மறுபடியும் ‘நீங்க டீச்சர் தானே’ என்றதும் மஞ்சுளா மிகவும் அதிர்ச்சியுற்றார்.
அருகில் இருந்த ஜானகி அம்மையார் தலைவரிடம் “இது நம்ம மஞ்சுங்க” என்றார்.
அப்போதும் அவருக்கு நினைவில் வரவில்லை. இதைக்காணச் சகியாத மஞ்சுளா கண்கலங்கினார்.
சிறிதுநேரம் ஜானகி அம்மையாரிடம் பேசிவிட்டு விடைபெற எண்ணி, எம்ஜிஆரின் அருகே சென்று ‘நான் விடைபெறுகிறேன்’ என்றதும்…
தலைவர் என்ன செய்தார் தெரியுமா???
‘ஒரு நிமிஷம் இருங்க’ என சைகை காட்டி தன் தலையணையில் அடியில் இருந்து நிறைய டாலர் நோட்டுக்களை எடுத்து மஞ்சுளாவிடம் கொடுத்து, நா குழறியபடி தலைவர் சொன்னது ” செலவுக்கு வெச்சுக்கங்க… போகும்போது ஆட்டோவில் போங்க…”…
இதைக்கேட்டதும் மஞ்சளா பிரமிப்பும், நெகிழ்ச்சியும் அடைந்து கண்ணீர் விட்டுக் கூறியதாவது :
“எம்ஜிஆர் அவர்களை இந்த உடல்நிலையில் காணும்பொழுது என்னால் தாங்கமுடியல. ஆனால் அதைவிட, ‘தனக்கு சுயநினைவு சரியில்லாத அந்த சூழ்நிலையிலும் பிறருக்கு கொடுத்து உதவவேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் மறவாத அந்த மாமனிதரை நினைத்து ஏற்பட்ட பிரமிப்பில் பொங்கிவந்த கண்ணீரை அடக்கமுடியாமல் அழுது தீர்த்தேன்’ என்றார்.
எந்த ஒரு கற்பனைக்கும் எட்டாத செயல் இது.
எந்த அளவு தன் இரத்தத்தில் கொடைகுணம் ஊறியிருந்தால் இப்படிச் செய்ய இயலும்..
.”கர்ணன் கூட தலைவரின் கால்தூசு தானோ” என்று தோன்றுமளவுக்கு தலைவரின் ஒவ்வொரு செயலும் இருந்திருக்கின்றது.
எட்டாவது வள்ளல் அல்ல நம் மக்கள்திலகம் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல்.