ம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். ஆச்சரியமாக இருக்கிறதா.. அனிமேசன் உருவில் நடிக்க இருக்கிறார்கள்.
நடிகர் எம்ஜிஆர் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் அடுத்த பாகமான ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற படம் உருவானது. ஆனால் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்ட எம்.ஜி.ஆர்., அந்த படத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.

எம்ஜிஆர் உயிருடன் இருக்கும்போது நடிக்கக் ஆசைப்பட்ட இப்படத்தை, அவருக்கு நெருக்கமானவர்களில் ஒருவரான நடிகர் ஐசரிவேலனின் மகன் ஐசரி கணேஷ் அனிமேஷன் முறையில் உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடிப்பதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.  அதாவது அவரும் அனிமேசன் உருவம்தான்.

மேலும், இப்படத்தில் பழம்பெரும் நடிகர்களான நாகேஷ், நம்பியார், தேங்காய் சீனிவாசன் உள்ளிட்டோரும் அனிமேசன் உருவங்களாக வர இருக்கிறார்கள்.

இப்படம் அடுத்த ஆண்டு எம்ஜிஆர் பிறந்தநாளின்போது வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]