சென்னை: எம்ஜிஆர் 10வது பிறந்தநாள் இன்று அதிமுகவினரானல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது உருவப்படத்துக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தின்ர்.
பொன்மன செம்மல், புரட்சித் தலைவர் கழக நிறுவனர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர், அவர்களின் பிறந்த நாள் தமிழ் சமூக வரலாற்றின் பொன்னாள். அவரது பிறந்தநாளை அதிமுகவினர் சிறப்பாக கொண்டாட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, இன்று அதிமுகவினர் மற்றும் எம்ஜிஆர் ரசிகர்களால் நாடு முழுவதும் எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாள் கொண்டாட்டம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அங்குள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுள்ளனர்.
எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், “அள்ளி அள்ளிக் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர், கடைநிலை தொழிலாளியையும் மதிக்கும் பண்பாளர்,சரித்திர திட்டங்களால் தமிழகத்தின் தாயுமானவராய் வாழ்ந்து,கோடிக் கணக்கான இதயங்களில் அழியாப் புகழுடன் இதயதெய்வமாக வீற்றிருக்கும் எங்கள் #புரட்சித்தலைவர்105 பிறந்தநாள் புகழ் வணக்கங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், “கழக நிறுவனத்தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்தவரு மான நமது மக்கள்திலகம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளில், பொன்மனச்செம்மல் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை போற்றி வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.