சேலம்:
தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதாலும், கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை கடந்த 7ந்தேதி (செப்டம்பர்) முழு கொள்ளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில், இன்று (செப்டம்பர்) 24ந்தேதி மீண்டும் முழு கொள்ளவை எட்டியுள்ளது. ஒரே மாதத்தில் 2முறை மேட்டூர் அணை நிரம்பியுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு கீழே சென்றது. இந்நிலையில் மீண்டும் அணைக்கு வரும் தண்ணீர் விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டியுள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 15ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு ,மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்இருப்பு 93.47 டிஎம்சி ஆக உள்ளது.