சென்னை:

சென்னை- சைதாப்பேட்டை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தில் ஏர்போர்ட்& வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரயில் பாதை சைதாப்பேட்டை வரை தரைக்கு மேல் பாலத்திலும், சைதாப்பேட்டையில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை சுரங்கத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

மே தின பூங்கா &தேனாம்பேட்டை&ஏ.ஜி.டி.எம்.எஸ். இடையே 3.7 கி.மீ. சுரங்கப்பாதை பணி தவிர, மற்ற இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஏற்கனவே முடிந்து முடிந்துவிட்டது. சைதாப்பேட்டையில் இருந்து டி.எம்.எஸ். வரையில் சுரங்கப்பாதை தோண்டும் பணிகளும் ரெயில்பாதை அமைக்கும் பணிகளும் தற்போது நிறைவடைந்தன.

இதையடுத்து சின்னமலை&சைதாப்பேட்டை வழியாக தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரை மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.