சென்னை: தற்போது புழக்கத்தில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து, விரைவில் அமைய உள்ள பரந்தூர் பசுமை சர்வதேச விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில்சேவை கொண்டு வர தமிழ்நாடுஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் சென்னையில் இருந்து பரந்தூருக்கு ஒரு மணி நேரத்தில் பயணம் செய்ய முடியும். அதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தற்போதுள்ள விமான நிலையத்தில் இருந்து குன்றத்தூர் மற்றும் திருநீர்மலை வழியாக பூந்தமல்லி வரை சுமார் 16 கிமீ தூரம் மெட்ரோ பாதைக்கான சாத்தியக்கூறு ஆய்வை CMRL ஏற்கனவே தொடங்கியுள்ளது. பாதை தயாரானதும், பழைய விமான நிலையத்திலிருந்து புதிய விமான நிலையத்திற்கு ஒரு மணி நேரத்திற்குள் பயணிக்க முடியும். பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்திற்கான டிபிஆர் உடன் ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த திட்டம் 2029க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில், பூந்தமல்லி – பரந்துார் மற்றும் கோயம்பேடு – ஆவடி வரை நீட்டிப்பு ஆகிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ., தொலைவுக்கு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இதற்கிடையே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புறநகர் பகுதிகளை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உள்ள 3 வழித்தடங்களையும் இணைத்து நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒன்றான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தை பரந்தூர் வரை 43.63 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டது. அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு தொடர்பாக விரிவானதிட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதில் பாதை, அதன் நீளம்,வழித்தட வகைகள், நிலையங்கள் அமையவுள்ள இடம், நிலையங்களின் எண்ணிக்கை, பயணிகள் எண்ணிக்கை, திட்டமதிப்பீடு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூந்தமல்லி – பரந்தூர் நீட்டிப்பு திட்டத்தில் நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், பாப்பான்சத்திரம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர் உள்பட 19 மெட்ரோ ரயில் நிலையங்கள் சாத்தியக்கூறு அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட உள்ள இந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு ரூ.10,712கோடி. இத்தடத்தில் பெரும்பாலும் மேம்பால பாதையில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திட்டஅறிக்கை 6 மாதங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் தற்போது சென்னையில் செயல்பாட்டில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான திட்டஅறிக்கை தயாரிக்கு ம் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க மத்தியஅரசு, சுற்றுச்சூழல் நிறுவனங்கள் அனுமதி வழங்கிய நிலையில், அங்கு விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போதுள்ள சென்னை விமான நிலையத்தில் இருந்து பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க முடிவு செய்து, அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே சென்னையில் இருந்து குன்றத்தூர் மற்றும் திருநீர்மலை வழியாக பூந்தமல்லி வரை சுமார் 16 கிமீ தூரம் மெட்ரோ பாதைக்கான சாத்தியக்கூறு ஆய்வை CMRL ஏற்கனவே தொடங்கியுள்ளது.
இந்த பாதை தயாரானதும், பழைய விமான நிலையத்திலிருந்து புதிய விமான நிலையத்திற்கு ஒரு மணி நேரத்திற்குள் பயணிக்க முடியும். பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்திற்கான டிபிஆர் உடன் ஆய்வு மேற்கொள்ளப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் இணைப்புக்கான திட்டம் இன்னும் ஓராண்டுக்குள் உறுதியாகும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுமார் . 43.63 கிமீ நீளம் கொண்டதாகவும், 19 ஸ்டேஷன்களைக் கொண்டதாகவும் இருக்கும் இந்த பாதைக்கான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயாரிக்க, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் அண்ட் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஏஇகாம் இந்தியா பிரைவேட் நிறுவனத்திடம் இருந்து ஏலம் பெற்றுள்ளது. இதற்கான டெண்டர் கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. இந்த பாதை 26.1 கிமீ கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி பைபாஸ் காரிடார்-4 இன் நீட்டிப்பாகும், இதன் ஒரு பகுதி 2025-இறுதிக்குள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுக் கட்டத்தில், பூந்தமல்லி, நசரத்பேட்டை போலீஸ் செக்போஸ்ட், செம்பரம்பாக்கம், திருமழிசை டவுன்ஷிப், பாப்பன்சத்திரம், செட்டிப்பேடு, தண்டலம், சிப்காட், இருங்காட்டுக்கோட்டை, பென்னலூர், ஸ்ரீபெரும்புதூர், பட்டுநூல் சத்திரம், திருமஞ்சத்ரம், இருங்குளம், இங்குளம் ஆகிய ஸ்டேஷன்கள் திட்டமிடப்பட்டுள்ளன. பிள்ளை சத்திரம், நீர்வளூர், பாரந்தூர் விமான நிலையம். இந்த பாதை தெற்கிலிருந்து விமான நிலையத்தை அடைந்து, முன்மொழியப்பட்ட சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையைக் கடந்து, நகரப் பக்கத்தில் உள்ள ஒரு நிலையத்திற்குள் நுழையும் வகையில் மெட்ரோ பாதை அமைக்க திட்டமிடப்பட்டு ள்ளது.
பரந்தூருக்கு மெட்ரோ ரயில் இணைப்பு நடைமுறைக்கு வந்ததும், பயணிகள் இடைவெளி இல்லாமல் மெட்ரோ மூலம் விமான நிலையத்தை அடையலாம். ஆலந்தூர் மற்றும் ஆலப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வழித்தடங்களை மாற்றி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து புதிய விமான நிலையத்திற்குச் செல்லலாம். விமான நிலையத்தின் முதல் கட்டம், உள்நாட்டு முனையம், சர்வதேச முனையம் மற்றும் ஓடுபாதையுடன் 2029க்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.