செண்டிரல் – நேரு பூங்கா  : மெட்ரோ ரெயில் சேவை விரைவில் தொடங்குகிறது

Must read

சென்னை

சென்னை செண்டிரல் – நேரு பூங்கா இடையிலும், சின்னமலை – டி எம் எஸ் இடையிலும் இந்த மாதம் மூன்றாவது வாரம் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்குகிறது.

சென்னை மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் தற்போது நேரு பூங்கா – செண்டிரல் மற்றும் டி எம் எஸ் – சின்னமலை இடையே நடைபெற்று வருகிறது.   இந்த சோதனை ஓட்டம் திருப்திகரமாக உள்ளதை முன்னிட்டு இந்த வழிகளில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவது குறித்து பயணிகள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

நேற்று மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரி ஒருவர், “ சென்னைமலை – டி எம் எஸ் மற்றும் செண்டிரல் – நேரு பூங்கா இடையே நடந்த மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் திருப்திகரமாக உள்ளது.   அதை ஒட்டி இந்த மாதம் மூன்றாவது வாரம் இந்த வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ளது.  இதனால் தற்போது உள்ளதை விட மேலும் 30% வரை மெட்ரோ ரெயிலில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்” என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article