சென்னை
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சோழிங்க நல்லூரில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை மேம்பால ரயில் பாதை அமைக்க டெண்டர் அழைப்பு விடுத்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நகரெங்கும் மெட்ரோ ரயில் சேவை திட்டம் தொடங்கப்பட்டு. அந்த சேவை ஒவ்வொரு கட்டமாக விரிவாக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது சோழிங்கநல்லூரில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை மேம்பால பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 10 கிமீ தூரமுள்ள இந்த பாதையில் 9 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அவை சோழிங்கநல்லூர் ஏரி 1, ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் (சோழிங்கநல்லூர் ஏரி 2), சத்யபாமா பல்கலைக்கழகம்,(செம்மணசேரி1), செம்மணசேரி 2, காந்தி நகர், நாவலூர், சிறுசேரி, சிறுசேரி சிப்காட்1 மற்றும் சிறுசேரி சிப்காட் 2 ஆகியவை ஆகும்.
இந்த பணிகளுக்கான டெண்டர் அழைப்பு விளம்பரத்தைச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதற்காக சர்வதேச அளவிலான, திட்டத்தை நடத்தக் கூடிய திறமை மற்றும் பணவசதி உள்ள நிறுவனங்களுக்கு விளம்பரம் மூலம் அழைப்பு விடப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் இந்த தடத்தில் மெட்ரோ ரயில் இயங்கும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.