சென்னை

மெட்ரோ ரெயிலின் முதல் பிரிவின் கடைசி பகுதியான வண்ணாரப்பேட்டை – டிஎம்எஸ் தடத்தில் சேவை பிப்ரவரி மாதம் முதல் தேதி தொடங்க உள்ளது.

Metro rolling in

சென்னை மெட்ரோ ரெயிலின் முதல் பிரிவின் கடைசி பகுதி சேவை வண்ணாரப்பேட்டை மற்றும் டி எம் எஸ் இடையில் அமைந்துள்ளது. இந்த தடத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிவடைந்தது. இனி இந்த 10 கிமீ தூரத்தில் இறுதிக் கட்ட சோதனை நடைபெறுவது மட்டுமே பாக்கி உள்ளது.

நாளை இந்த இறுதிக்கட்ட சோதனை நடைபெற உள்ளது. இந்நிலையில் எல் ஐ சி மற்றும் ஆயிரம் விளக்கு ரெயில் நிலையங்களில் ஃபால்ஸ் சீலிங் போன்ற பணிகளில் பழுது அடைந்துள்ளதால் அவற்றை சரி செய்யும் பணி நடைபெறுகிறது. அது இன்று முடிவடைய உள்ளதால் நாளை இறுதிக்கட்ட சோதனை நடைபெறுகிறது. அதன் பிறகு சேவை தொடங்க உள்ளது.

இந்த சேவை இந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்க உள்ள்தாக முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதன் பிறகு ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் பரிந்துரையின் படி பிப்ரவரி மாதம் முதல் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழா பிப்ரவரி 6 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஒரு நாளில் நடைபெற உள்ளது. சரியான தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என தெரிகிறது.

தொடக்க விழா சென்னை செண்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளது. விழாவுக்க்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. மத்திய இண அமைச்சர் அர்தீப்சிங் பூரி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அகியோர் இந்த சேவையை தொடங்கி வைக்க உள்ளனர்.