குளிர்காலம் சுகமானதுதான். ஆனால் பலருக்கு இது அலர்ஜியான காலமும்கூட. காரணம், இந்த சீசனில் பலருக்கும் ஜலதோஷம், ஜூரம் வரும். முகமும் உடலும் வறண்டு, பிரச்சினை தருவதுடன் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே பலர் உற்சாகமின்றி காணப்படுவர்.
இந்தத் தொல்லைகள் இன்றி, உங்களை அழகாக, இளமையாக, உற்சாகமாக வைத்திருக்க ஒரு எளிய வழி இருக்கிறது.
அதுவும் சுவையான வழி!
அது வேர்க்கடலையை ரசித்து, ருசித்து சாப்பிடுவதுதான்.
அப்படி என்ன வேர்க்கடலையில் இருக்கிறது என்கிறீர்களா?
உடலை உஷ்ணமாக வைத்திருக்கும்:
வேர்க்கடலை இயற்கையாகவே நமது உடலின் வெப்ப அளவை அதிகரிக்கக் கூடிய ஒன்று. இதனால் குளிர்காலத்தில் தேவையான வெது வெதுப்புடன் நமது உடல் இருக்கும். பொதுவாகக் குளிர்காலத்தில் நமது கல்லீரல் நல்ல ஆரோக்கியத்துடன் செயற்படும் என்பதால் எண்ணெய் நிறைந்த உணவுகளையும் அதனால் எளிதாக செரிமானம் செய்ய முடியும்.
கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும்
வேர்க்கடலை எண்ணெய் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பை தரக்கூடும் என்று ஆராய்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள், இதனால் பித்தக்கட்டிகள் உருவாவதற்கான அபாயம் குறைகிறது.
சர்க்கரை அளவைச் சரி செய்யும்:
வேர்க்கடலையில் இருக்கும் சத்துக்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவைச் சீர் படுத்தக் கூடியது. சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் 21% வரை குறையும் என்று தெரியவந்துள்ளது.
சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்:
வேர்க்கடலையில் இருக்கும் நல்ல கொழுப்பு சருமத்தில் எண்ணெய் பதத்தை பாதுகாக்கும் இதனால் குளிர்காலத்தில் நமது சருமம் வறண்டு போவதை தடுக்கலாம். மேலும் வேர்க்கடலையில் இருக்கும் வைட்டமின் இ மற்றும் சி சத்துக்கள் சருமத்தின் பொலிவை அதிகரிப்பதுடன், தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கும். வேர்க்கடலையில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் அப்பழுக்கற்ற சருமத்தை தரக்கூடியது.
கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்
# ஓ.கே.வா… அவசியம் வேர்க்கடலை சாப்பிடுங்க. வறுத்து சாப்பிட வேண்டாம், அவித்து சாப்பிடுங்கள். அதுதான் அதிக பயன் தரும்.
இன்னொரு விசயம்.. இந்த குளிர்காலத்தில்தான் வேர்க்கடலை அதிகமாக விளையும். ஆகவே விலையும் மலிவாக கிடைக்கும்.
எச்சரிக்கை:
ஒருவேளை உங்களுக்கு வேர்க்கடலை சாப்பிடுவது ஒவ்வாது என்றால் சாப்பிட வேண்டும்.
வேர்க்கடலையை அதிகம் சாப்பிடுவதும் செரிமான கோளாறை ஏற்படுத்தி வயிற்று வலி ஏற்படும்.