டில்லி :
தமிழகத்தில் மீத்தேன், ஷெல் கேஸ் எடுக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஓஎன்ஜிசி திட்டம் தொடர்ந்து செயல்படும் என்றும், மேலும் விரிவாக்கம் இருக்காது என்றும் கூறினார். இந்த திட்டம் காரணமாக நெடுவாசல் பகுதியில் விவசாயம் மற்றும் சுற்றுச்சுழல் பாதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழத்தில் தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் ஓஎன்ஜிசியின் எரிவாயு எடுக்கும் திட்டம், மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் போன்ற பல்வேறு பொதுமக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்து, ஒப்பந்தமும் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதி பொது மக்கள் மற்றும் விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக மத்திய அரசின் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசியின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மீத்தேன் திட்டம், ஷேல் கேஸ் திட்டம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்பட எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மக்களைவில் இன்று தமிழக உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழத்தில் மீத்தேன் அல்லது ஷேல் கேஸ் உள்ளிட்ட எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்றும், தமிழக அரசு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியை பெற்ற பிறகே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தி தொடங்க முடியும் என தெரிவித்துள்ள அமைச்சர் தர்மேந்திர பிரதான், கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி சார்பில் எந்தப் புதிய திட்டமும் தொடங்கப்படவில்லை என்றும் ஓஎன்ஜிசி செயல்பாடுகளால் நெடுவாசலில் விவசாயம் மற்றும் சுற்றுச்சுழல் பாதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், சேலம் ஆகிய இடங்கள் குழாய் மூலம் இயற்கை எரிவாயு அமைப்பை ஏற்படுத்த சாத்தியமுள்ள புவியியல் இடங்களாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.