ஜிஎஸ்டி எதிரொலி: பென்ஸ், பிஎம்டபிள்யூ சொகுசு கார்கள் ரூ. 7 லட்சம் வரை விலை குறைப்பு!!

டெல்லி:

இந்தியாவில் ஜூலை மாதம் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)அமலாகிறது. இதனால் சொகுசு கார்களின் விலை தற்போது குறைந்துள்ளது. இத்தகைய கார்களை வாங்க தற்போது உகந்த நேரம் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களான மெர்சிடீஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கார்களின் விலை ரூ. 1.25 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை உடனடியாக குறைகிறது. இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட இந்த நிறுவனங்களின் மாடல் கார்கள் இந்த விலை குறைப்பில் வரும் என்று தெரிவிகப்பட் டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் இ ந்த விலை குறைப்பை இன்று அறிவித்துள்ளது. சி கிளாஸ், இ கிளாஸ், எஸ் கிளாஸ், எம் கிளாஸ் மாடல்கள் போன்ற கார்களின் விலை தற்போதுள்ள ஷோரூம் விலைகளில் இருந்து குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நிறுவன நிர்வாக இயக்குனர் ரோலண்ட் போல்கர் கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி.க்கு முந்தைய பயன்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மற்றொரு பெரிய நிறுவனமான ஜெர்மனி நாட்டை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 5 சீரிஸ், 7 சீரிஸ், எக்ஸ்5 மற்றும் சென்னை தொழிற்சாலை சார்ந்த கார்களின் விலையை உடனடியாக குறைத்துள்ளது.

இந்நிறுவன இந்திய குழும தலைவர் விக்ரம் பவா கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி அமல்படுத்துவதை வரவேற்கிறோம். இதன் பயனை வாடிக்கையாளர்களுக் விரைந்து வழங்கும் வகையில் கார்களின் விலை குறைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்த விலை குறைப்பு ஒரு லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.


English Summary
Mercs, BMWs get cheaper by up to Rs 125,000-Rs 700,000 even before GST rollout