சென்னை: சென்னை மற்றும் மதுரையில் ‘ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025  போட்டிகள் நடைபெறும் என  துணை முதலமைச்சர் உதயநிதி அறிவித்து உள்ளார். இந்த போட்டிகள் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது.

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (FIH) ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை – தமிழ்நாடு 2025 போட்டியின் அதிகாரப்பூர்வ இலட்சினையை (Logo) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி  சென்னை மற்றும் மதுரையில் ‘ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 போட்டிகள் நடைபெறம் என அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (FIH) ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தமிழ்நாடு 2025 போட்டி நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழ்நாடு அரசின் சார்பில் ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 போட்டிகள், வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது

இப்போட்டிகள், ஹாக்கி விளையாட்டில் பெருமை மிகுந்த சென்னை மற்றும் மதுரை நகரங்களில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. உலகதரத்தில், போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

ஏற்கனவே, தமிழ்நாடு அரசின் சார்பில் பின்வரும் ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட்டு, சாதனைகளை படைத்திருக்கிறோம். First ever Hockey Champions Trophy (1996), The India-Pakistan series (1999), Asia Cup (2007), The India-Belgium series (2008) and  7th Asian Men’s Hockey Champions Trophy held recently (2023)  போட்டிகளை நடத்தி உள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 4 ஆண்டுகளில், 44th FIDE Chess Olympiad (2022), Squash World Cup (2023), Asian Hockey Champions Trophy (2023),  World Surfing League (2023), Chennai Cyclothon, Khelo India National Youth Games (2023), South Asian Junior Athletics Championship (2024), Formula 4 street night race (2024),  Chennai Open (WTA 250 tournament) உள்ளிட்ட பல போட்டிகளை சிறப்பாக செயல்படுத்திய திராவிட மாடல் அரசு, தற்போது இந்த போட்டியையும் மிகச்சிறப்பாக நடத்தி உள்ளது.

இதையடுத்து,  தற்போது, ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பையின் 14ஆவது தொடரை நடத்தவுள்ளோம். இந்த போட்டியில், உலகளாவிய நாடுகளில் இருந்து சுமார் 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த போட்டிக்காக  தமிழ்நாடு சார்பில்  65 கோடி ரூபாய்  ஒதுக்கப் பட்டு உள்ளது.

“கோயம்புத்தூரில் இருக்கின்ற ஹாக்கி ஸ்டேடியம் International Standard தான். சென்னையில் எல்லா வசதிகளுடன் கூடிய ஒரு ஸ்டேடியம் இருப்பதினால் சென்னையில் நடத்த முடிவு செய்தோம். சென்னையில் மட்டும் இருக்கக்கூடாது தென் தமிழ்நாட்டிலும் இதை நடத்த வேண்டும் என்பதற்காக, இதை நடத்தும் போது Infrastructure Development பண்ண வேண்டும் என்பதற்காக மதுரையிலும் நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளோம்.

தென் தமிழ்நாட்டிலிருந்து நிறைய Hockey Players வருகிறார்கள். அவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும், உற்சாகப் படுத்தவேண்டும் என்பதற்காக தெற்கு பகுதியிலும் நடத்துகின்றோம்” என்று தெரிவித்தார்.