டில்லி

ண்களுக்கு விந்தணுக்கள் மூலம் கொரோனா பாதிப்பு அதிகம் உண்டாக வாய்ப்புள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது.

உலகெங்கும் பரவி வரும் கொரோனாவால் இதுவரை 25.03 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு சுமார் 1.71 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.   இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் உள்ளன.  இதில் மரணமடைந்தோர் எண்ணிக்கையில் பெண்களை விட ஆண்களே பல மடங்கு அதிகமாக உள்ளனர்.

இதற்கு ஆண்களுக்குப் புகை பிடித்தல் உள்ளிட்ட பழக்கங்கள் அதிக அளவில் உள்ளதாகக் கூறப்பட்டது.   இதையொட்டி அமெரிக்காவின் புரோன்க்ஸ் மருத்துவ மையத்தில் பணி புரியும் டாக்டர் அதிதி சாஸ்திரி மும்பையில் காஸ்தூரிபா மருத்துவமனையில் பணி புரியும் தனது தாய் ஜெயந்தி சாஸ்திரி உடன் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளார்.  இந்த ஆய்வில் மும்பையைச் சேர்ந்த 68 நோயாளிகள் மருத்துவ விவரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

அந்த ஆய்வில் ஆண்களின் விந்தணுக்களில் உள்ள புரதத்துக்கும் கொரோனா வைரஸ் அதிக நாட்கள் இருப்பதற்கும் தொடர்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.   அங்கிலோடென்சின் என்னும் இந்த புரதம் நுரையீரலில் உள்ள என்சைம் 2 மற்றும் இதயத்தில் உள்ள ஏஸ்2 ஆகியவற்றிலும் அதிக அளவில் காணப்படுகிறது.

ஆனால் விந்தணுக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு வெலியில் உள்ளதால்  கொரோனா வைரஸ் நெடுங்காலத்துக்கு அங்கேயே இருக்க வாய்ப்பு உள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.   இந்த தாய் மகள் இருவரின் ஆய்வின் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களை விடப்  பெண்கள் விரைவில் குணமடைவதற்கான காரணம் என  தெரிய வந்துள்ளது.

பொதுவாக கொரோனாவில் இருந்து பெண்கள் குணமடைவதை விட ஆண்கள் குணமடைய மேலும் இரு தினங்கள் அதிகம் ஆகிறது என்பது ஏற்கனவே தெரிய வந்துள்ளது.   இந்த தாமதத்துக்குக் காரணம் மட்டுமின்றி அதிக அளவில் ஆண்கள் கொரோனாவால் உயிர் இழப்பதற்கும் விந்தணுக்களில் உள்ள புரதமே காரணம்  என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.