சென்னை: தமிழ்நாட்டின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் அஞ்சலையம்மாவிற்கு கடலூரில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று  செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பாக விவாதக்ள் நடைபெற்றது. பின்னர் துறை சார்ந்து பதில்அளித்து  பேசிய அமைச்சர் சாமிநாதன்,  கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும்,  சமூக ஊடகப்பிரிவு தொடங்கப்படும், பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்டங்கள், அப்துல் கலாம் உள்பட மொழிப்போர் மற்றும் திராவிட தியாகிகளுக்கு சிலை நிறுவனப்படும் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி அண்ணா பல்கலை கடலூரில் சுதந்திரப் போராட்ட பெண் தியாகி அஞ்சலை அம்மாளுக்கு சிலை அமைக்கப்படும் ” என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு கம்யூனிஸ்டு கட்சிகள் வரவேற்பு தெரிவித்துஉள்ளது. இதுகுறித்து கூறிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது,

விடுதலை போராட்டத்தில் 7 1/2 ஆண்டுகள் சிறைப்பட்டவரும், முதல் பெண் சட்டமன்ற உறுப்பினருமான திருமிகு. அஞ்சலையம்மாவிற்கு கடலூரில் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டுமென கடந்த 8.12.2014 ல், அன்றைய தமிழக அரசிடம் முன்வைத்திருந்தோம். எங்களின் கோரிக்கை, இந்த ஆட்சியில்  சாத்தியமானது மகிழ்ச்சி தருகிறது.

அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு கடலூரில் சிலை அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.