ஷில்லாங்: மேகாலய சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (மார்ச் 20) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது அவையில் ஆளுநர் இந்தியில் உரையாற்றி னால் இதற்கு சில கட்சி உறுப்பினர்கள் குரல் கொடுத்த நிலையில், அவருக்கு ஆதரவாக சில அமைச்சர்களும் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

60தொகுதிகளைக்கொண்ட மேகாலயா மாநிலத்தில் பிப்ரவரி 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில்  ஆளும்கட்சியான தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயகக் கட்சி 11 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைக்கஎந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேசிய மக்கள் கட்சிக்கு பாஜக ஆதரவு அளித்தது. இதையடுத்து கான்ராட் சங்மா முதல்வராக பதவி ஏற்றார்.

இதைத்தொடர்ந்து மார்ச் 20ந்தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடங்கிய ஆளுநர் உரையுடன் தொடங்கியது.  ஆளுநர் பாகு செளஹான் பேரவையில் இந்தியில் உரையாற்றினார். மேகாலயா மாநிலத்தின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் உள்ளது. அப்படி இருக்கும்போது ஆளுநர் இந்தியில் உரையாற்றியது சலசலப்பை ஏற்படுத்தியது.

உத்தரபிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவரும், அந்த மாநிலத்தில் இருந்து 6 முறை எம்எல்ஏவாகவும் இருந்த ஆளுநர் சவுகான், சட்டசபையின் முதல் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் இந்தியில் பேசத் தொடங்கியவுடன் வாய்ஸ் ஆஃப் பீப்பிள்ஸ் கட்சியைச் சேர்ந்த (விபிபி) எம்எல்ஏக்கள் குழு ஆளுநரின் பேச்சை கண்டித்து கூச்சலிட்டனர்.

ஆளுநர்  ‘எங்களுக்கு புரியும் மொழியில் அவையில் பேச வேண்டும்’ என விபிபி கட்சி எம்எல்ஏ அர்டெண்ட் மில்லர் குரல் கொடுத்தார். அவருக்கு ஆதரவாக மக்கள் குரல் கட்சி (VPP) எம்.எல்.ஏ  மற்றும் அமைச்சர்கள் என 4 பேர் எதிர்ப்பு நிலையில், சபாநாயகர், ஆளுநர் தொடர்ந்து இந்தியில் உரையாற்ற  அனுமதி வழங்கினார். அதை  கண்டித்து, 4  எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விபிபி கட்சி எம்எல்ஏ அர்டெண்ட் மில்லர், மேகாலயா, இந்தி பேசும் மாநிலம் அல்ல; அசாம் மொழி எங்கள்மீது திணிக்கப்படும்போதுதான், மக்களும், தலைவர்களும் முடிவு செய்து தனி மாநிலம் கண்டோம்; எங்களுக்கு புரியும் மொழியில் ஆளுநர் பேச வேண்டும் என வலியுறுத்தினார்.