விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம்…!

Must read

வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் புதிய படத்தில் மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த 14-ம் தேதி பழநியில் தொடங்கியது.

சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார்.

இந்நிலையில், இதில் ஒப்பந்தமாகியிருந்த அமலாபால் தேதிகள் பிரச்சினை காரணமாக படத்திலிருந்து விலகிவிட்டார். அவருக்குப் பதிலகா மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் . படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.

More articles

Latest article